‘Work From Home’ – அதிக வேலைப்பளுவால் நொந்து போகும் ஊழியர்கள்!! | Companies are giving Indians working from home too much work | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online
சீனாவில் ஒலிக்கத்தொடங்கிய கொரோனா என்ற வார்த்தை வெகு சீக்கிரமே இந்தியாவிலும் எதிரொலிக்கத் தொடங்கியது. தொட்டாலே தொற்றிவிடும் கொரோனாவிடம் இருந்து தப்பிக்க நாடு முழுவதும் 144 தடையை அறிவித்தார் பிரதமர். போக்குவரத்து ஏதும் இல்லை, அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் நாடும் கடைகள் அல்லாத மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்யுங்கள் என அறிவுறுத்தின.
தன்னுடைய நிலை குறித்து தெரிவித்துள்ள வங்கி ஊழியர் ஒருவர், 12 முதல் 14 மணி நேரம் வரை வேலை பார்க்க வேண்டி உள்ளது. எனக்கு வயதான பெற்றோர் உள்ளனர். அவர்களுக்கு உணவு ஆர்டர் செய்து கொடுக்கிறேன். கொரோனா அச்சத்தில் இப்படி உணவு ஆர்டர் செய்வது எனக்கு பயமாக இருக்கிறது. வீட்டில் வேலை பார்க்கும் போது வீட்டு பொறுப்புகள் அதிகம் இருக்கும் என மேலதிகாரிகளுக்கு தெரியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
வீட்டில் இருந்து வேலை பார்த்தால் ஓய்வு எடுக்கலாம். வேலைப்பளு குறைவாக இருக்கும் என நினைத்தோம். ஆனால் உண்மைக்கதை வேறு மாதிரி இருக்கிறது. நினைத்ததற்கு எதிராக இருக்கிறது என தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்துள்ளார் ஊழியர் ஒருவர்.
தூய்மை பணியாளர்களுக்கு பண மாலை அணிவித்து, பூக்கள் தூவி நன்றி – நெகிழ்ச்சி வீடியோ!!