2 நாட்களுக்கு அனல் காற்று வீசும் : வானிலை மையம் எச்சரிக்கை | Hot air blows next 2 days in North Tamil Nadu : Chennai met center | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online
வட தமிழகத்தில் 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகிய ‘Amphan’ புயல் மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே கரையை கடந்தது. இந்தப் புயலால் மேற்கு வங்கத்தில் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. அதேசமயம் இந்தப் புயல் தமிழக கடலோரப் பகுதிகளின் காற்றில் இருந்த ஈரப்பதத்தை இழுத்துச் சென்றதால், வறண்ட வானிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அடுத்த 2 நாட்களுக்கு வட தமிழகத்தில் அனல் காற்று வீசும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. அத்துடன் மன்னார் வளைகுடா, லட்சத்தீவுகள், மாலத்தீவுகள் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.