பொதுமுடக்கத்தில் மக்களுக்கு உதவிய  டாப் 10 எம்.பிக்கள் பட்டியலில் ராகுல்: ஆய்வில் தகவல் | Rahul Gandhi in list of top 10 MPs who helped people during the lockdown: Survey | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online


Rahul-Gandhi-in-list-of-top-10-MPs-who-helped-people-during-the-lockdown--Survey

கவர்ன் ஐ சிஸ்டம்ஸ் நடத்திய ஆய்வில், கொரோனா பொதுமுடக்கத்தின்போது மக்களுக்கு உதவிசெய்த டாப் 10 எம்.பிக்கள் பட்டியலில் ராகுல் காந்தி, தேஜஸ்வி சூர்யா, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

image

புதுடெல்லியைச் சேர்ந்த மக்கள் கருத்துக்கணிப்பு தளமான கவர்ன் ஐ சிஸ்டம்ஸ் நடத்திய ஆய்வில், கொரோனா காலத்தில் மக்களுக்கு உதவிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பட்டியலில் முன்னாள் காங்கிரஸ் தலைவரும் வயநாடு எம்.பி.யுமான ராகுல்காந்தி உட்பட 10 எம்.பிக்கள் இடம்பெற்றுள்ளனர்.

அக்டோபர் 1-ஆம் தேதி தொடங்கிய கணக்கெடுப்பில், கள நேர்காணல்கள் மற்றும் அந்தந்த தொகுதி மக்களின் கருத்துகளின் அடிப்படையில் முதல் 10 எம்.பி.க்கள் அடையாளம் காணப்பட்டனர். அந்த பட்டியலில்  இடம்பெற்ற டாப் 10 எம்.பி.க்கள்: அனில் ஃபிரோஜியா (பாஜக), அதலா பிரபாகர ரெட்டி (ஒய்.எஸ்.ஆர்.சி.பி), ராகுல் காந்தி (காங்கிரஸ்), மஹுவா மொய்த்ரா (திரிணாமூல் காங்கிரஸ்), எல்.எஸ். தேஜஸ்வி சூர்யா (பாஜக), ஹேமந்த் துக்காராம் கோட்சே (சிவசேனா), சுக்பீர் சிங் பாடல் (எஸ்ஏடி), சங்கர் லால்வானி (பாஜக), சுமதி என்கிற தமிழச்சி தங்கப்பாண்டியன்(திமுக), நிதின் ஜெயராம் கட்கரி(பாஜக)Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *