“தீவிர ரசிகைதான். ஆனா…”, “இடையில் ஒரு புயல்!” – ரஜினி அரசியலும் நெட்டிசன்கள் பார்வையும் | ACTOR RAJINIKANTH S POLITICAL ENTRY SOME NETIZENS PRAISE AND SOME CRITICISE IT TOO | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online
ஜனவரியில் கட்சி தொடங்குவதாக நடிகர் ரஜினி அதிகாரபூர்வமாக அறிவித்த அடுத்த நொடியிலிருந்தே ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளைத் தெறிக்க ஆரம்பித்துவிட்டனர். இது தொடர்பான பல ஹேஷ்டேகுகள் தேசிய அளவில் ட்ரெண்டிங்கில் இருந்தன. இந்தக் கருத்துகள் அனைத்துமே ரஜினி அரசியலை வரவேற்பதும், விமர்சித்தும் சரிவிகிதத்தில் இடம்பெற்றிருந்தன. நெட்டிசன்களின் அந்தக் கருத்துப் பதிவுகளில் சில இங்கே…
fB/Barakath Ali:
“ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி. மேற்பார்வையாளர் தமிழருவி மணியன். 1975-ம் ஆண்டு ரஜினி சினிமாவுக்கு வந்து 45 ஆண்டுகள் ஆகிவிட்டது. ரஜினியின் ரசிகர் ஒருவருக்கு கூடவா ஒருங்கிணைப்பாளர், மேற்பார்வையாளர் பதவிக்கு தகுதி பெறவில்லை.”
FB/ Kathir Vel:
“உடம்புல இவ்ளோ நோய்கள வச்சுகிட்டு 70 வயசுல இப்படி ஒரு ரிஸ்க் எடுக்கதுக்கு அசாத்திய மன உறுதி வேணும். எண்ணங்கள் உயர்ந்ததாவும் செயல் திட்டம் தெளிவாவும் எதிர்பார்ப்பு குறைவாவும் இருந்தாதான் அப்படியான மன உறுதி உண்டாகும். சாதிப்பாரான்னு தெரியாது. முயற்சி செய்வார்னு நம்பலாம். வெல்கம் ரஜினி.”
Twitter/Ponnusamy Thillaiarasu:
“நான் ஜெயித்தால் அது மக்களின் வெற்றி, நான் தோற்றால் அது மக்களின் தோல்வி – ரஜினி | நீங்க ஜெயித்தாலும் தோற்றாலும் அது உங்களுடைய வெற்றி தோல்விதான்; மக்களை குறை சொல்வது கோழைகளின் செயல்.”
FB/Prabhala Subash:
“நான் ரஜினியின் தீவிர ரசிகைதான். ஆனால், அவர் கட்சிக்கு வருவது எனக்கு தனிபட்ட முறையில் விருப்பம் இல்லை. ஒரு நடிகராக, நல்ல மனிதராக எனக்கு அவரை அவளோ புடிக்கும். இருப்பினும் எனது வாழ்த்துக்கள். அவர் வயதிற்கும் அவர் விருப்பத்திற்கும் என்றும் நான் மரியாதை தருவேன். உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் ஒதுங்கி போங்க, இங்க அவர தரக்குறைவா பேசவேண்டாம். நட்பில் இருந்த ஒதுங்கிகூட போகலாம் நீங்கள், அது உங்கள் விருப்பம்.”
Twitter/மு.இராயதுரை:
“திமுக வாக்கு வங்கியை பிரிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் கையிலெடுத்துள்ளது பிஜேபி. அதில் ஒன்றுதான் ரஜினி அரசியல் அறிவிப்பு.”
FB/ரஜினி வீரமணி :
“தமிழகத்தில் பஞ்சம்
தண்ணீருக்கு மட்டுமா……?
நல்ல தலைவருக்கும் தான்…! வா… ரஜினி… வா”
FB/ந.பா. சேதுராமன் சேது
“ரஜினிகாந்த் மீது ஏன் பாய்கிறீர்கள் என்று தான் தெரியவில்லை…
கொரோனா தொற்று காரணமாகவே, என் வருகை ‘கொஞ்சம்’ தாமதமாகி விட்டது என்று அவர் சொன்ன பிறகும், ஏன் பாய்கிறீர்கள்?”
Twitter/ கோவெரா
ரஜினிகாந்த் ஐ… சுற்றித்தான், இனி தமிழக அரசியல் இயங்கும்!!
Twitter/ தங்கசாமி
“ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் நுழைவு தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மற்றும் சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் எனக்கு எள் முனை அளவும் சந்தேகம் இல்லை. ரஜினிகாந்தின் வியூகம் நிச்சயமாக வெற்றியைத் தேடித்தரும்”
Twitter/சுரேஷ்
நிவர்க்கும் புரெவிக்கும் இடையில ஒரு புயல்
#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல
Twitter/ கவுஷிக் LM
‘உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்… நான் உயிர் வாழ்ந்தால் இங்கே தான் ஓடிவிட மாட்டேன்’ இப்படி ரஜினியின் படத்தில் எழுதப்பட்டுள்ள ஒவ்வொரு பாடலும் அரசியலை மையம் கொண்டே எழுதப்பட்டுள்ளது.
Twitter/ ஆறுமுகம் ஸ்ரீனிவாசன்
“எப்படியும் அடுத்த சில மாதங்களில் யாருக்கு வெற்றி என்பது தெரிந்து விடும். இந்தப் போரில் ஒன்று ரஜினியை நம்பி உள்ளவர்கள் தோற்கலாம். இல்லையென்றால் ரஜினி அரசியலுக்கு சரிப்பட்டு வரமாட்டார் என சொல்பவர்கள் தோற்கலாம். அனைத்தும் விரைவில் தெரிந்து விடும்.”
Twitter/ கணேசன் பிள்ளை
“இறுதியாக அரசியலுக்கு வந்துவிட்டார். கொஞ்சம் லேட் தான் என்றாலும் அவசியமான நேரத்தில் என்ட்ரி கொடுத்துள்ளார்.”
> தொடர்புடைய செய்தி > #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல – ரஜினிக்கு ஆதரவாகவும் எதிராகவும் ட்ரெண்டிங் யுத்தம்!