திராவிடக் கட்சியின் மூன்று எழுத்து மந்திரம்: அண்ணாவின் நினைவு தினம் இன்று | Today is Annas Memorial Day | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online


Today-is-Annas-Memorial-Day

அண்ணா என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட அண்ணாதுரை தமிழகத்தின் 6-வது முதலமைச்சராவார். இந்தியா குடியரசான பிறகு காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி முதன் முதலாக தமிழகத்தில் ஆட்சி அமைத்தது என்றால் அது அண்ணாவின் திராவிடக் கட்சிதான். 1909 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி சின்ன காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிறந்த அண்ணா, மாணவப்பருவத்திலேயே ராணியம்மையாரை மணம்புரிந்தார். அவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. ஆகையால் அவர் தமக்கையின் பேரக்குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தனர்.

பொருளியல் மற்றும் அரசியல் பட்டப்படிப்புகளை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்ற அண்ணா, பின்பு பச்சையப்பன் உயர் நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார். ஆசிரியப்பணியை இடைநிறுத்தி பத்திரிகை துறையிலும், அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

எழுத்துகளில் வாழும் அண்ணா | எழுத்துகளில் வாழும் அண்ணா - hindutamil.in

அன்றைய காலக்கட்டத்திலும் கொஞ்சம் படித்துவிட்டால் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும், அதிலும் கல்லூரியில் படித்துவிட்டால் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும் என்ற மனப்பான்மையும் ஆங்கில மோகமும் அதிகமிருந்தது. அண்ணா, தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறப்பாகச் சொற்பொழிவாற்றவும் எழுதவும் வல்லவர். இவர் பல முற்போக்கு, சீர்திருத்த நாடகங்களையும் எழுதியிருக்கிறார். அவற்றுள் சிலவற்றை இயக்கி இருக்கிறார். தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதி அதன் மூலம் தன்னுடைய திராவிட சீர்திருத்தக் கருத்துகளை முதன்முதலாக பரப்பியவரும் அண்ணாதான்.

ஒரு தடவை சில இங்கிலாந்து மாணவர்கள் அண்ணாவை பரிகசிப்பதற்காக அவரிடம் ஏனென்றால் என்ற வார்த்தை மூன்று தடவை தொடர்ந்து வருகிற மாதிரி வாக்கியம் கூற முடியுமா என்று கேட்டனர். அதற்கு அவர், “No sentence can end with because because, because is a conjunction என்றார். எந்தத் தொடரிலும் இறுதியில் வராச்சொல் ‘ஏனென்றால்’. ஏனென்றால், ‘ஏனென்றால்’ என்பது இணைப்புச்சொல்” என்று உடனே பதிலளித்து தனது மொழிப்புலமையை வெளிப்படுத்தி வியப்பூட்டினார்.

1962 போர் சூழலில் மாநிலங்களவையில் முழங்கிய அண்ணா– News18 Tamil

பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, நீதிக் கட்சியில் சேர்ந்தார். பின்னர் பெரியாருடன் திராவிடக் கழகத்தில் இணைந்து, மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பகுத்தறிவுக் கருத்துகளையும், சமூக சீர்திருத்தக் கருத்துகளையும் பரப்புவதில் முன்னின்று ஈடுபட்டார்.

பின்னர் பெரியாருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, திராவிடக் கழகத்தின் முக்கிய உறுப்பினர் பலருடன், 1949ல், பெரியாரை விட்டு விலகி, திமுகவை உருவாக்கினார்.

Anna was a symbol of intelligence and simplicity– News18 Tamil

இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டதன் விளைவாக மக்களாதரவை பெற்றார் அண்ணா. அவரது கட்சியின் முக்கிய கொள்கை முழக்கமாகவும் அவரது கட்சியின் பண்பாடாகவும் இம்மூன்று வார்த்தைகளை முன்மொழிந்தார். அவை கடமை, கண்ணியம், கட்டுப்பாடு.

1967-இல் நடைபெற்ற தேர்தலில் பங்கு பெற்ற திமு கழகம் வெற்றி பெற்று முதன் முறையாக திராவிட ஆட்சியை தமிழகத்தில் அமைத்தது. அவரது தலைமையில் 1967 மார்ச் 6இல் அமைந்த அமைச்சரவை இளைஞர்களை கொண்ட அமைச்சரவையாக விளங்கியது. ஆட்சி பொறுப்பை ஏற்றதும் சுயமரியாதைத் திருமணங்களை சட்டப்பூர்வமாக்கி தனது திராவிடப் பற்றை உறுதிப்படுத்தினார். இரு மொழி சட்டங்களை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) உருவாக்கி முந்தைய அரசின் மும்மொழித்திட்டத்தினை (தமிழ், இந்தி, ஆங்கிலம்) முடக்கினார்.

பேரறிஞர் அண்ணா யார்...? மக்கள் மனதை எப்படி வென்றார்...? | who is  c.n.annadurai? anna birthdayday special story - Tamil Oneindia

மக்களின் பேராதரவைப் பெற்றிருந்தும், இரண்டு ஆண்டுகள் மட்டுமே பதவியிலிருக்க அவரால் முடிந்தது. 1969 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி அண்ணா என்ற அறிஞரின் சகாப்தம் முடிவுக்கு வந்தது. அவரின் இறுதி ஊர்வலம் கின்னஸ் உலக சாதனையில் இடம்பெறுகின்ற அளவில், மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். ஒரு முதலமைச்சராக மட்டுமன்றி, ஒரு அறிஞராகவும், சமூக சீர்திருத்த வாதியாகவும், ஒரு சிறந்த அரசியல்வாதியாகவும், மிகச் சிறந்த பேச்சாளராகவும், மக்கள் தலைவனாகவும், இன்றும் தமிழக மக்களால் அவர் நினைவு கூறப்படுகிறார்.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *