ட்ரம்பின் வார்த்தைகளையே வைத்து அவரை கேலிசெய்த கிரேட்டா தன்பெர்க் | Greta Thunberg trolled Trump with his own words goes viral on social media | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online


india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு பதிலடி கொடுத்த கிரேட்டா தன்பெர்க்கின் ட்வீட் இணையங்களில் வைரலாகி வருகிறது.

சுவீடன் நாட்டைச் சேர்ந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க். 17 வயது சிறுமியான இவரை 2019ஆம் ஆண்டின் ‘பர்ஸன் ஆஃப் தி இயர்’(Person of the Year) என டைம் பத்திரிகை வெளியிட்டிருந்தது.

அதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ’’இது அபத்தமானது. கிரேட்டா தனது கோபத்தைக் கட்டுப்படுத்த பயிற்சி எடுக்கவேண்டும். பிறகு ஒரு நல்ல பழைய திரைப்படத்திற்கு தனது நண்பருடன் செல்லவேண்டும். Chill Greta, Chill!’’ என கிரேட்டாவை கேலிசெய்து 12/12/2019 அன்று ட்வீட் செய்திருந்தார்.

அதிபரின் இந்த கேலிக்கு சரியான நேரத்தில் பதிலடி கொடுக்க 11 மாதங்கள் காத்திருந்து இருக்கிறார் கிரேட்டா. தற்போது அமெரிக்க தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், தேர்தல் முடிவுகளில் குளறுபடி உள்ளதாக ட்ரம்ப் கொந்தளித்து, வாக்கு எண்ணிக்கையை நிறுத்தவேண்டும் என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சுதா கொங்கரா இயக்கத்தில் ஒன்றாக நடிக்க விருப்பம் தெரிவித்த மாதவன், சூர்யா! 

அதற்கு ட்ரம்ப்பின் கேலி வார்த்தைகளையே அவருக்கு திருப்பி அடித்துள்ளார் கிரேட்டா.
’’இது அபத்தமானது. ட்ரம்ப் தனது கோபத்தைக் கட்டுப்படுத்த பயிற்சி எடுக்கவேண்டும். பிறகு ஒரு நல்ல பழைய திரைப்படத்திற்கு தனது நண்பருடன் செல்லவேண்டும். Chill Donald, Chill!’’ என்று கிரேட்டா நேற்று ட்வீட் செய்துள்ளார்.

கிரேட்டாவை கேலி செய்த ட்ரம்பின் ட்வீட்டைவிட, கிரேட்டாவின் ட்வீட் வைரலாகி வருகிறது. லட்சக்கணக்கான லைக்குகளை பெற்றதுடன், கிரேட்டாவிற்கு ஆதரவாக பலர் ட்வீட் செய்துவருகின்றனர்.

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *