“சோழனின் பயணம் தொடரும்.. இளவரசன் 2024ல் திரும்பி வருவான்” ஆயிரத்தில் ஒருவன்-2 ஓர் அலசல்! | Actor Dhanush and his Brother Selvaraghavan join hands for Aayirathil Oruvan 2 and does actor Karthi acts in this sequel | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online
படம் நன்றி : INOX Leisure Ltd
தமிழ் சினிமா இயக்குனர்களில் தனித்துவமானவர் இயக்குனர் செல்வராகவன். காதல் கொண்டேனில் ஆரம்பித்த அவரது பயணம் கடைசியாக வெளியான என்.ஜி.கே வரையில் ரசிகர்களால் என்றென்றும் போற்றி பாடி கொண்டாடப்பட்டு வருகிறது. அதிலும் புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் மாதிரியான படங்களின் மூலமாக சினிமா ரசிகர்களுக்கு கலர் ஃபுல் ட்ரீட் கொடுத்தவர் செல்வராகவன். 2021 புத்தாண்டு தினத்தன்று ஒரு இனிப்பான செய்தியை அவர் பகிர்ந்திருந்தார். அது ‘ஆயிரத்தில் ஒருவன் – 2’ குறித்த செய்தி தான். இதில் தம்பி தனுஷுடன் இணைய உள்ளதாக தெரிவித்துள்ளார்.
செல்வராகவனை GOD OF FANTASY என சொல்லலாம். அவரிடம் கற்பனைக்கு எள்ளளவும் பஞ்சமில்லை. ஆயிரத்தில் ஒருவன் மற்றும் இரண்டாம் உலகம் மாதிரியான படங்களை அதற்கு உதாரணமாக சொல்லலாம். வசனங்களை ராவாக கொடுத்து ரசிகனை ரசனையோடு அணுகுவது செல்வா ஸ்டைல். வழக்கமாக ஒரு படம் புதிதாக திரை அரங்குகளில் வெளியாகும் போது தான் ரசிகர்கள் கொண்டாடுவார்கள். ஆனால் செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படம் பலமுறை திரை அரங்குகளில் ரீ ரிலீஸ் ஆகியுள்ளன. அப்போதெல்லாம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை அந்த படம் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆயிரத்தில் ஒருவன்
கடந்த 2010இல் கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா மற்றும் பார்த்திபன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஆயிரத்தில் ஒருவன். நிகழ் காலத்தில் சோழர்களுக்கும், பாண்டியர்களுக்கும் இடையே உரிமைக்கான போர் நிகழ்ந்தால் எப்படி இருக்கும் என்பதை தனது கற்பனை குதிரையை ஓடவிட்டு அழகாக படமாக்கி இருப்பார் செல்வராகவன். முதல் பிரேம் தொடங்கி கடைசி பிரேம் வரை செதுக்கி இருப்பார். முதல் பாதி முழுவதும் சோழர்கள் பதுங்கியுள்ள ரகசிய இடத்தை நோக்கியே நகரும் காட்சிகள் அது சார்ந்த முடிச்சுகளுமாக த்ரில் என்றால். இரண்டாம் பாதியில் நடிப்பால் ரசிகர்களை நாற்காலியில் நாடு கடத்தி இருப்பார் சோழ மன்னராக நடித்த பார்த்திபன். கிளைமாக்சில் சோழர்கள் வீழ்வது போல காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அதில் தூதுவனாக வரும் நடிகர் கார்த்தி சோழ இளவரசரை பாண்டியர்களிடமிருந்து பத்திரமாக மீட்டு செல்வது போல படம் முடியும். அது தான் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்திற்கு முடிச்சு போட்டது.
2010இல் வெளியான போது 181 நிமிடங்கள் ஓடும் படமாக வெளியானது. இருப்பினும் பல எதிர்ப்பு மற்றும் சென்சார் சிக்கலினால் 154 நிமிடங்களாக குறைக்கப்பட்டது. சோழர்கள் காட்சி அமைப்பு குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு “அது என் கற்பனை” என சொல்லியிருந்தார் செல்வராகவன். இப்படியெல்லாம் பல தடைகளை கடந்து தான் ஆயிரத்தில் ஒருவன் இன்றும் பேசப்பட்டு வருகிறது.
இரண்டாம் பாகம் எப்போது வரும்? என்பதே பெரும்பாலானவர்களின் கேள்வியாக இருந்தது. இந்நிலையில் தான் தனுஷ் நடிப்பில் 2024இல் ஆயிரத்தில் இரண்டாம் பாகம் வெளியாகும் என செல்வராகவன் தெரிவித்துள்ளார்.
தனுஷ்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற தனியார் அமைப்பு நடத்திய விருது வழங்கும் விழாவில் நடிகர் தனுஷும், இயக்குனர் செல்வராகவனும் பங்கேற்றிருந்தனர். அப்போது அவர்களிடம் வைக்கப்பட்ட கேள்விக்கு ஆயிரத்தில் ஒருவர் 2வில் தனுஷின் பங்கு இருக்கும் என சொல்லப்பட்டது. ஆனால் அது என்ன என்பது சஸ்பென்ஸாக இருந்தது. முதல் பக்கத்தில் தனுஷ் ஒரு பாடல் பாடி இருப்பார். இந்த நிலையில் தான் தனுஷ் இரண்டாம் பக்கத்தில் நடிப்பது உறுதியாகி உள்ளது.
பாண்டியர்களிடம் இருந்து காப்பாற்றப்பட்ட இளவரசர் வேடத்தில் தனுஷ் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. காதல் கொண்டேன், புதுப்பேட்டை மற்றும் மயக்கம் என்ன படத்தை அடுத்து அண்ணனும், தம்பியும் இணைந்து பணியாற்ற உள்ள படம் என்பதால் இதற்கு எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறியுள்ளது.
கார்த்தி உள்ளாரா?
முதல் பக்கத்தில் தூதுவனாக முத்து கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த கார்த்தி இரண்டாம் பாகத்தில் உள்ளாரா? என ரசிகர்கள் இப்போது கேள்வி எழுப்ப தொடங்கி உள்ளனர். கோலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அவரது ரோல் இரண்டாம் பாகத்தில் எப்படி இருக்கும். அவரது கதாபாத்திரத்திற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்ற கேள்விகளும் எழுகின்றன. ஓரே கார்த்தி, தனுஷ் இருவரும் இணைந்து நடித்தால் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும் என்று பலரு அதற்கு இயக்குனர் செல்வராகவன் தனது கதையின் மூலம் பதில் சொல்வார் என தெரிகிறது. அதே போல ரீமா சென், ஆண்ட்ரியா மாதிரியான நடிகர்கள் முதல் பாத்திரத்தில் ஏற்றிருந்த கதாப்பாத்திரங்கள் குறித்தும் கேட்கப்பட்டு வருகின்றன.
ரசிகர்கள் ட்விட்டர் உட்பட சமூக வலைதளத்தில் ஆயிரத்தில் ஒருவன் படத்தை கொண்டாடி வருகின்றனர். அதன் வெளிப்பாடாக FAN MADE போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். அதே நேரத்தில் இந்த படத்திற்கு எதிர்ப்பு குரலும் எழுகின்றன அதையும் இயக்குனர் செல்வராகவன் கவனத்தில் எடுத்துக்கொண்டு கதையமைக்க வேண்டி உள்ளது. முதல் பக்கத்தில் ஒளிபரப்பு பணியை கவனித்த ராம்ஜி இந்த படத்திலும் செல்வராகவனுடன் இணைந்து பணியாற்றலாம்.
Superb ! Thank you so much ??? https://t.co/FiPSwPMFyg
— selvaraghavan (@selvaraghavan) January 2, 2021
?? @Karthi_Offl@selvaraghavan#AayirathilOruvan2 #Dhanush #Karthi pic.twitter.com/Y06m5D7TDe
— நந்தா ❤️ (@praveensurya33) January 2, 2021