சாத்தான்குளம் சம்பவம்; சிலர் வைரஸை விட ஆபத்தானவர்கள் – கார்த்திக் சுப்புராஜ் | Satthankulam Incident: Karthik Subburaj demand justice for Poor soul | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online


india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சில மனிதர்கள் வைரஸை விட மிக ஆபத்தானவர்களாக இருக்கின்றனர் என சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக கார்த்திக் சுப்புராஜ் ட்வீட் செய்துள்ளார்.

image

ஊரடங்கை மீறி கடை திறப்பு: எடை இயந்திரத்தை தூக்கி வீசிய தலைமைக் காவலர்

சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னீஸ் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட இரு காவல் ஆய்வாளர்கள் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  இந்த உயிரிழப்புச் சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து கருத்துத் தெரிவிக்கும் வகையில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் “ என்ன நடக்கிறது சாத்தான்குளத்தில். இது பயங்கரமானது. மனித நேயம் அவமதிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படவேண்டும். இறந்த அந்த ஏழை ஆன்மாக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். சில மனிதர்கள் வைரஸை விட மிக ஆபத்தானவர்களாக இருக்கின்றனர்” என்று பதிவிட்டுள்ளார். Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *