சாத்தான்குளம் கொடூரம்: ஜெயம் ரவி காட்டம் | Actor Jayam Ravi speaks about Sathankulam father son death | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online


india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

விசாரணைக் கைதிகள் உயிரிழந்தது தொடர்பாக நடிகர் ஜெயம் ரவி ட்வீட் செய்துள்ளார்.

கடந்த 19ஆம் தேதி பொதுமுடக்கத்தை மீறி கடையை திறந்ததாக கூறி ஜெயராஜ் மற்றும் பென்னீஸ் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கிளைச்சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள், திடீரென அடுத்தடுத்த உயிரிழந்தனர்.

image

விசாரணைக்கைதிகள் உயிரிழந்தது தொடர்பாக நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விசாரணைக் கைதிகள் உயிரிழப்பில் முறையான விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திறந்தவெளி கழிப்பிடம் சென்ற பெண்ணுக்குப் பிரசவம் : சிசுவைத் தூக்கிச் சென்ற வனவிலங்கு

image

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் ஜெயம் ரவி ட்வீட் செய்துள்ளார். இது குறித்து ட்வீட் செய்துள்ள அவர், சட்டத்தை விட உயர்ந்தவர் எவரும் இல்லை. மனிதத் தன்மையற்ற இந்த செயலுக்குநீதி வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் #JusticeForJeyarajAndFenix என்ற ஹேஸ்டேக்கையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *