“கொரோனா தடுப்புதான் முக்கியம்; மற்றதெல்லாம் அப்புறம்” – திருமணத்தை ஒத்திவைத்த பெண் டாக்டர் | “Corona is important; everything else is out there” – Female doctor postponing marriage | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online


india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

“கொரோனா நோய் தடுப்புதான் முக்கியம்; மற்றதெல்லாம் அப்புறம்” என்று கூறி திருமணத்தை ஒத்திவைத்த பெண் மருத்துவரின் முடிவு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

image

 

கொரோனாவால் பெண்களை விட அதிகமாக உயிரிழக்கும் ஆண்கள்? ஆய்வுகள் சொல்வது என்ன..?

இது குறித்து ஷீபாவின் தந்தை முகமது கூறும்போது ” ஷீபா எங்களிடம் வந்து இந்த நேரத்தில் திருமணம் செய்வது ஏற்றதாய் இல்லை என சொல்லியபோது, இரு வீட்டாரும்
ஆலோசித்தோம். மேலும் இந்த நேரத்தில் திருமணத்தை விட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதே முக்கியமென்றும், இதனால் இந்தத் திருமணத்தை கொரோனா வைரஸ் பாதிப்பு முடிவுக்கு வந்த பின்னர் வைத்துக்கொள்ளலாம் என்றும் கூறினாள். இதற்கு மணமகன் வீட்டாரும் ஒத்துழைத்ததால் தற்போது திருமணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது” என்றார்.

 image

 

ஒரு மாணவியின் ஆலோசனை: வீட்டில் என்ன செய்யலாம்?

இது குறித்து ஷீபாவின் தாயார் சுபைதா கூறும்போது “ ஷீபாவுக்கு மூன்று மாதம் முன்பே திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அந்த நேரத்தில் சீனாவில் கொரோனா பரவும் செய்தி வந்தது. அது
நமது நாட்டிற்கெல்லாம் வராது என்ற எண்ணத்தில் திருமண வேலைகளை துவக்கினோம். ஷாப்பிங் எல்லாம் முடிந்தது. ஷீபாவின் முடிவை எப்படி மணமகன் வீட்டில் சொல்ல
என்று திணறினோம். அப்போது மருமகனும் இதற்கு ஒத்துழைப்பு தந்ததால் இரு வீட்டாரும் பேசி திருமணத்தை ஒத்தி வைத்துள்ளோம், இப்போதுதான் இரு வீட்டாருக்கும் நிம்மதி
ஏற்பட்டுள்ளது.” என்றார்.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *