கிடுகிடுவென உயர்வு : கொரோனா பாதிப்பில் 2ஆவது இடத்தில் தமிழகம்..! | Coronavirus affected cased increased upto 309 in tamilnadu reached second place in india | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online


india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 2ஆம் இடத்தில் உள்ளது.

  image

மகாராஷ்டிராவில் மேலும் 81 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்தமாக 416 பேருக்கு மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மேலும், கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஒருவர் மட்டுமே இதுவரை கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்துள்ளார்.

மூன்றாவது இடத்தில் உள்ள கேரள மாநிலத்தில் இதுவரை 286 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மேலும் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. புதுச்சேரியில் மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதியானது, மொத்த எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *