ஐசிசி விருது: தசாப்தத்தின் சிறந்த ஒருநாள், டி20, டெஸ்ட் விருதை வென்ற வீரர்கள் விவரம்! | LIST OF PLAYERS WHO WON THE ICC Award of the Decade IN ODI T20I AND TEST CRICKET | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online


LIST-OF-PLAYERS-WHO-WON-THE-ICC-Award-of-the-Decade-IN-ODI-T20I-AND-TEST-CRICKET

சர்வதேச கிரிக்கெட் களத்தில் கடந்த பத்து ஆண்டுகளில் சிறப்பாக கிரிக்கெட் விளையாடிய  சிறந்த கிரிக்கெட் வீரர்கள் யார் என்பதை வாக்கெடுப்பு மூலம் கண்டறிந்து அவர்களுக்கு விருது கொடுத்து கௌரவித்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி). 

கடந்த  பத்து ஆண்டுகளின் சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த ஒருநாள் வீரர், சிறந்த டெஸ்ட் வீரர், சிறந்த டி20 வீரர், ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் விருது என வெவ்வேறு பிரிவுகளில் விருது கொடுக்கப்பட்டு உள்ளது.

image

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சிறந்த கிரிக்கெட் வீரராகவும், சிறந்த ஒருநாள் வீரராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராகவும், ஆப்கானிஸ்தானை சேர்ந்த ரஷீத் கான் சிறந்த டி20 கிரிக்கெட் வீரராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் விருதும் கொடுக்கப்பட்டுள்ளது. 

மகளிர் கிரிக்கெட்டை பொருத்த வரையில் ஆஸ்திரேலியாவின் எலிஸ் பெர்ரி சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரே சிறந்த ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் வீராங்கனைக்கான விருதையும் வென்றுள்ளார். 

image

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *