உத்தராகண்ட் பனிப்பாறை உடைந்ததன் பின்னணியில் பருவநிலை மாற்றம்… எப்படி? | Experts say climate change behind Uttarakhand glacier break off | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online


Experts-say-climate-change-behind-Uttarakhand-glacier-break-off

உத்தராகண்ட் மாநிலத்தில் பனிப்பாறை உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் பின்னணியில் ‘பருவநிலை மாற்றம்’தான் காரணமாக உள்ளதாக சூழலியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். உத்தராகண்ட்டில் நடந்தது ‘ஓர் அரிய சம்பவம்’ என்றும் அவர்கள் விவரிக்கின்றனர்.

இது தொடர்பாக, பருவநிலை மாற்றம் தொடர்பான அரசுகளுக்கிடையிலான குழுவான ஐபிசிசி-யின் 6 வது மதிப்பீட்டு அறிக்கையின் முதன்மை ஆசிரியர் அஞ்சல் பிரகாஷ், “புவி வெப்பமடைதல் காரணமாக பனிப்பாறைகள் உருகுவதால், இது ஒரு பருவநிலை மாற்ற நிகழ்வு போலவே தோன்றுகிறது. இந்து குஷ் இமயமலைப் பகுதியில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. உலக வெப்பநிலையின் அதிகரிப்பு, இமயமலைப் பகுதியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

மாறிவரும் பருவநிலையில் ஐபிசிசி-யின் பெருங்கடல்கள் மற்றும் கிரையோஸ்பியர் பற்றிய சிறப்பு அறிக்கை (SROCC) பருவநிலை மாற்றம் இயற்கை ஆபத்துகளின் அதிர்வெண் மற்றும் அளவை மாறியுள்ளதாக கூறியுள்ளது” என்று பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

image

சில பிராந்தியங்களில் பனிப்பாறைச் சரிவுகள் அதிகரித்துள்ளன. பனிச்சரிவுகள் காரணமாக வெள்ளமும் ஏற்பட்டுள்ளது என்று கூறும் விஞ்ஞானிகள், சாமோலி மாவட்டத்தில் பனிப்பாறைச் சரிவு ஏற்பட்டது குறித்த தகவல்களை உங்களுக்கு வழங்குவதற்கான தரவு இப்போது எங்களிடம் இல்லை. ஆனால் எங்களுக்குத் தெரிந்த விஷயம் யாதெனில், புவி வெப்பமடைதலால் பனிப்பாறைகள் உருகுகின்றன. இது ஒரு பருவநிலை மாற்ற நிகழ்வு போலவே தோன்றுகிறது என உறுதிபடுத்தியுள்ளனர்.

“புவி வெப்பமடைதலின் தாக்கத்தால் பனிப்பாறைகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஐ.சி.ஐ.எம்.ஓ.டி (ICIMOD) தரும் சமீபத்திய மதிப்பீட்டு அறிக்கையும் இவற்றை சுட்டிக்காட்டியுள்ளன. இந்து குஷ் இமயமலைப் பகுதியில் வெப்பநிலை அதிகரித்து வருவதாகவும்,
புவி வெப்பமயமாதல் காரணமாக உலகளாவிய வெப்பநிலையின் உயர்வு, இமயமலைப் பகுதியில் உயரத்தை சார்ந்து அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக அளவில் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்க வேண்டும். இந்து குஷ் பிராந்தியத்தில் இது குறைந்தபட்சம் 1.8 டிகிரி செல்சியஸாக உயரும்; மேலும் சில இடங்களில் 2.2 டிகிசி செல்சியஸுக்கு மேல் இருக்கும். உண்மையில் நாம் எந்த அளவுக்கு பாதிக்கப்படைந்துள்ளோம் என்பதை இது காட்டுகிறது.

இதற்கிடையில், ஐ.ஐ.டியின் பனிப்பாறை மற்றும் நீர்வளவியல் உதவி பேராசிரியர் பாரூக் ஆசாம் அளித்த பேட்டி ஒன்றில், “பனிப்பாறை வெடிப்பு என்பது மிகவும் அரிதான சம்பவம். செயற்கைக்கோள் மற்றும் கூகுள் எர்த் படங்கள் இப்பகுதிக்கு அருகில் ஒரு பனிப்பாறை ஏரிகள் இருப்பதைக் காட்டவில்லை. ஆனால் இப்பகுதியில் பனிப்பாறைகளுக்குள் ஏரிகள் இருப்பதை உணர்த்துகிறது. அவற்றின் காரணமாக இது நிகழ்ந்திருக்கலாம். இது, உண்மையிலேயே எப்படி நிகழ்ந்தது என்பதை உறுதிப்படுத்த எங்களுக்கு மேலும் வானிலை அறிக்கைகள் மற்றும் தரவு தேவை. புவி வெப்பமடைதலால் இப்பகுதி வெப்பமடைந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.

image

“பருவநிலை மாற்றத்தால் உந்தப்பட்ட பனிப்பொழிவு மற்றும் மழைப்பொழிவு போன்ற ஒழுங்கற்ற வானிலை முறைகள் உள்ளிட்டவைதான் இந்த நிகழ்வுக்கு காரணமாக அமைகின்றன. இதற்கு முன்னர் பனியின் வெப்பநிலை மைனஸ் 6 முதல் மைனஸ் 20 டிகிரி செல்ஸியஸ் வரை இருந்தது. அது இப்போது மைனஸ் 2 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது; இது உருகுவதற்கு அதிக வாய்ப்புள்ளது” என்று அவர் எச்சரித்துள்ளார்.

முன்னதாக, உத்தராகண்டின் சமோலி மாவட்டத்தில் பனிப்பாறைகள் உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளம் அப்பகுதியையே வாரிச் சுருட்டிச் சென்றது. குறிப்பாக நீர் மின் உற்பத்தி நிலையம் அடித்துச் செல்லப்பட்டதுடன், அதற்கான தபோவன் – விஷ்ணுகூட் சுரங்கப் பாதைக்குள் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இடிபாடுகளுக்கு இடையே சிக்கியவர்களை மீட்க ராணுவம் மற்றும் விமானப்படை, கப்பல் படை குழுக்கள் தேடும் பணியில் இறங்கியுள்ளன. இவை தவிர தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மற்றும் பல்வேறு துணை ராணுவப்படையினரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி நடைபெறுகிறது. ராணுவத்தின் பொறியியல் நிபுணர் குழுவினர் இடிபாடுகளை அகற்றும் பணியில் உள்ளனர்.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *