இந்த 4 மாநில மக்கள் உள்ளே வரத்தடை – கர்நாடக அரசு | In Lockdown4, Karnataka Bans Entry Of People From 4 States Till May 31 | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online
மே 31 வரை கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இருந்து மக்கள் யாரும் கர்நாடகாவுக்குள் வரத் தடை விதிக்கப்படுவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது
மூன்றாம் கட்ட ஊரடங்கு நிறைவடைந்துள்ள நிலையில் பல மாநிலங்களும் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளன. அதன்படி, கர்நாடகாவில் பேருந்துக்கு 30 பேர் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டு பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. சிவப்பு மண்டல பகுதியைத் தவிர மற்ற இடங்களில் அனைத்து கடைகளும் திறக்கப்படும், பூங்காங்கள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இருந்து மக்கள் யாரும் கர்நாடகாவுக்குள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மே31ம் தேதி வரை இந்தத் தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் மாஸ்க் அணியாவிடில் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும், தெலங்கானாவில் ஆன்லைன் வர்த்தகம் முழுமையாக செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் சலூன் கடைகள் இயங்கலாம். ஹைதராபாத்தில் மட்டும் ஆட்டோ, டாக்ஸி சேவைகளுக்கு அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது
டெல்லியில் குறைந்த பயணிகளுடன் பேருந்து, ஆட்டோ, டாக்ஸி சேவை உள்ளிட்டவை மீண்டும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆட்டோவில் ஒரு பயணியும், டாக்ஸ்யில் இரு பயணியும், பேருந்தில் அதிகபட்சமாக 20 பயணிகள் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் வணிக வளாகங்களின் 50% கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மீதியுள்ள கடைகள் மற்றொரு நாளில் திறக்கப்படும். இது சுழற்சி முறையில் நடைபெற வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
சலூன், பார்லர்கள் ஏசி இல்லாமல் இயங்க அனுதிக்கப்பட்டுள்ளது. சலூன்களுக்கு வருபவர்கள் வீட்டில் இருந்தே துண்டு கொண்டுவர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 50% பயணிகளுடன் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவை செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
தாய்லாந்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்: உடனடியாக மீட்க கோரிக்கை