இத்தாலியில் கொரோனா பாதிப்பு குறைந்தது எப்படி? | How Italy reduced corona pandemic issues | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online


india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா வைரஸ் தாக்கத்தால் மிகக் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வந்த இத்தாலி, இப்போது அதனை கட்டுக்குள் கொண்டு வந்து கொண்டிருக்கிறது. 

மார்ச் மாத மத்தியில் வரை, உலகிலேயே அதிக அளவு கொரோனா உயிரிழப்புகளை கொண்டிருந்தது இத்தாலி. கொரோனாவின் மையப்புள்ளி எனும் அளவுக்கு அங்கு உயிரிழப்புகளும், பாதிப்புகளும் இருந்தன. இப்போது இத்தாலி மீட்சிப் பாதைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. அங்கு ரத்த பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்படுவதற்கு நல்ல பலன் கிடைத்துவருவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

image

கொரோனாவால் பாதிக்கப்பட்டு அறிகுறி தெரியாதவர்கள் உடலின் ரத்த பிளாஸ்மாவில் வைரசை எதிர்க்கக்கூடிய ஆன்டிபாடி உருவாகிறது. இந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட ரத்த பிளாஸ்மாவை கொடையாக பெற்று, நோயாளிகளுக்கு செலுத்தும்போது பாதிக்கப்பட்டவர் ரத்தத்திலும் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படுகிறது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு பிளாஸ்மா செலுத்தப்படுவது அவர்களது நோயின் தீவிரத்தை குறைப்பதில் முக்கிய பங்காற்றுவதாக லம்பார்டி நகர மருத்துவமனை மருத்துவர் ஒருவர் தெரிவிக்கிறார். வடக்கு இத்தாலியில் பிளாஸ்மாவை கொண்டு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

image

ஆயினும் இந்த சிகிச்சை முறை இன்னும் சோதனை அடிப்படையிலேயே பயன்படுத்தப்பட்டு வருவதாக இத்தாலி தெரிவித்துள்ளது.

பிளாஸ்மா சிகிச்சை பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிறுவனம் ஒன்று, குணமடைந்தவர்களிடம் இருந்து பிளாஸ்மாக்களை கொடையாக பெற்றுவருகிறது. செப்டம்பர் இறுதிக்குள் கொரோனாவுக்கான பிளாஸ்மா சிகிச்சை மாதிரி நடைமுறைக்கு வரும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளதுSource link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *