ஆடையால் வந்த தொல்லை… வேதனையில் கைகூப்பி சமாளித்த பிரியங்கா சோப்ரா | Priyanka Chopra reveals 2 most uncomfortable outfits she’s ever worn The tape came off I was holding up dress with namaste pose | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online
புதுவிதமான கண்கவர் டிசைனர் ஆடைகள் அணிபவர்களில், பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தனக்கென தனி இடம் தக்க வைத்துள்ளார். சில நேரங்களில் அத்தகைய ஆடைகள் அசௌகரியமானதாகவும் அமைந்துவிடும் என்கிறார் அவர். சமீபத்தில் ஒரு பேட்டியில், ரெட் கார்பெட் நிகழ்வுகளில் அணியப்படும் ஆடைகள் அணிவதற்கே மிகவும் கஷ்டமாக இருக்கும் என்கிறார் பிரியங்கா சோப்ரா.
பீப்பிள் பத்திரிகையின், அந்நோயிங் பட் பீயூடிபியுல் லுக்ஸ் எனும் பேட்டியின்போது, மிஸ் வேர்ல்ட் போட்டிக்கான ஆடை தன்னை சங்கடத்திற்குள்ளாக்கியது என்றார். பிரியங்கா சோப்ரா கூறுகையில், ‘’மிஸ் வேர்ல்ட் 2000 நிகழ்வின்போது அணிந்த ஆடை தன்னை சுற்றி ஒரு நாடா போல ஒட்டி அணியப்பட்டது. நான் உலக அழகி பட்டம் வென்றபோது, அந்த பட்டை அவிழ ஆரம்பித்தது. அதனால் நான் மிகவும் மன அழுத்தத்திற்கு உள்ளானேன்.
அப்போது நான் வணக்கம் கூறுவதுபோல கைகளை வைத்துக்கொண்டே நடந்தேன். பார்வையாளர்கள் நான் வணக்கம் கூறுகிறேன் என்று நினைத்தார்கள், அனால் நானோ, அந்த ஆடை அவிழாமல் தூக்கி பிடிப்பதற்காக அவ்வாறு கைகளை வைத்திருந்தேன்’’ என்றார் அவர்.
“அடுத்து , ரெட் கார்பெட் நிகழ்வில் ரால்ப் லாரன் என்னும் அமைப்பு மூலம் உருவாக்கப்பட்ட ஆடை சிகப்பு நிறத்தாலும், தங்க நிறத்தாலான மேலங்கியும், அடங்கியது. அந்த ஆடை அணியும் போது அதற்கான வடிவம் பெற அணியப்பட்ட கார்செட் மிகவும் இருக்கமானதாகவும், மூச்சு விடுவதை கூட சிரமமாக இருந்தது. என்னுடைய விலா எலும்பையே மாற்றியது போல கஷ்டமாக இருந்தது. விருந்தில் உட்கார கூட மிகவும் கஷ்டமாக இருந்தது. அதனால்,என்னால் சரியாக சாப்பிடவும் முடியவில்லை” என்கிறார் பிரியங்கா சோப்ரா. .