அம்பானி முதல் அதானி வரை … கொரோனா தாக்கத்தால் பொருளாதாரத்தில் கடும் பின்னடைவு | Coronavirus pandemic impact: Mukesh Ambani’s net worth drops 28% | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online
கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக இந்தியாவில் அம்பானியை தவிர மற்ற அனைவரும் உலகின் டாப் 100 பணக்காரர்களில் பட்டியலில் இருந்து வெளியேறினர்.
அத்துடன் இந்த பெரும் வீழ்ச்சியால் அந்நிறுவனத்தின் பொருளாதார நிலை 19 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு சரிந்துள்ளதாகவும், இதனால் உலக அளவிலான பணக்காரர்கள் பட்டியலில் 8வது இடத்தில் இருந்த அம்பானி 17வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதுதவிர உலகின் டாப் 100 பணக்காரர்கள் பட்டியில் இருந்த அதானி 6 பில்லியன் அல்லது 37% இழப்பை சந்தித்து பட்டியலில் இருந்தே வெளியேறியுள்ளார். மேலும், ஹெச்.சி.எல் நிறுவனம் (5 பில்லியன் நஷ்டம்) மற்றும் உதய் கொடாக் (4 பில்லியன் நஷ்டம்) நிறுவனம் ஆகியவையும் 100 பேர் பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளன.