“அஜாக்கிரதையாக இருந்துவிட்டேன் மன்னியுங்கள்” கொரோனா பாதித்தவர் கண்ணீருடன் வேண்டுகோள் | Kindly forgive me says Corona affected patient in a video | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online


india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

‘என்னால் மற்றவர்களுக்கு சிரமம் வந்துவிட்டது யாருக்கும் கொரோனா வரக்கூடாதுன்னு இறைவனை வேண்டுகிறேன். என்னை மன்னித்து விடுங்கள்’ என கரூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கரூர் அருகில் கடம்பன்குறிச்சியை சேர்ந்தவர் சென்னையில் 108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 24 ஆம் தேதி கரூர் வந்தார். வெளியூரில் இருந்த வந்த காரணத்தால், அவரை வீட்டை தனிமைபடுத்தி சுகாதாரத் துறையினர் நோட்டீஸ் ஒட்டினர். மேலும், அவரையும் 14. நாள்களுக்கு தனிமையில் இருக்க சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுருந்தனர்.

image

ஆனால். மருத்துவத் துறையினர் எச்சரிக்கையை மீறி கடந்த 27 ம் தேதி ஒரு நாள் 108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளராக பணிபுரிந்தார். பிறகு அவருக்கு உடல்நிலை சரியில்லாத நிலை ஏற்பட்டது. அப்போது அவருக்கு பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு அவர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதன் பிறகு, அந்த நபர் வசித்த கடம்பன்குறிச்சி பகுதியை தனிமைப்படுத்தி சுகாதாரத் துறையினர் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் வேறு யாருக்கேனும் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதா என மருத்துவ பரிசோதனைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கரூர் மருத்துவமனையில் உள்ள கொரோனா பாதித்த அந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், அவர் நான் மிகவும் அஜாக்கிரதையாக இருந்து விட்டேன் என்னால் மற்றவர்களுக்கு தொந்தரவு ஏற்பட்டு உள்ளது. என்னால் மற்றவர்களுக்கு கொரோனா பரவி இருக்குமோ என்ற அச்சத்தில், மருத்துவர்கள். பொதுமக்களுக்கு பரிசோதனைகளை செய்து வருகின்றனர்.

image

அவர்களில் யாருக்கும் கொரோனா தொற்று இருக்கக்கூடாது என்று ஆண்டவனை வேண்டுகிறேன். என்னால் மற்றவர்களுக்கு தொந்தரவு ஆகிவிட்டது தயவுசெய்து எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள்’ என கண்ணீர் மல்க அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *